பன்னீர் சமையல்

 பன்னீர் கட்லெட் 




 

தேவையான பொருட்கள்:


பன்னீர்                                 - 125 கிராம்

பச்சை பட்டாணி               - 1/2 கப் வேகவைத்தது

உருளைக்கிழங்கு             - 1 வேகவைத்தது

கேரட்                                    - துருவியது 

இஞ்சி                                    - துருவியது

மஞ்சள் தூள்                        - 1 சிட்டிகை

பச்சை மிளகாய்                 - 1 பொடியாக நறுக்கியது

கொத்தமல்லி இலை         - பொடியாக நறுக்கியது

காஷ்மீரி மிளகாய் தூள்   - 1/2 தேக்கரண்டி

சீரக தூள்                              - 1/4 தேக்கரண்டி

ஆம்சூர் தூள்                        - 1/2 தேக்கரண்டி

பால்

பிரட் தூள்

எண்ணெய்

 


செய்முறை:

 

1. மிக்ஸியில் வேகவைத்த பச்சை பட்டாணியை கொரகொரப்பாக அரைக்கவும்.

 

2. அரைத்த பட்டாணியுடன் துருவிய உருளைக்கிழங்கு, துருவிய கேரட், துருவிய இஞ்சி, மஞ்சள் தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், மற்றும் துருவிய பன்னீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

 

3. அடுத்து சிறிதளவு கட்லெட் கலவையை எடுத்து வடை போல் தட்டவும்.

 

4. செய்த கட்லெட்'டை பாலில் போட்டு, பிரட் தூளில் பிரட்டவும்.

 

5. இதை 15 நிமிடம் பிரிட்ஜ்'ஜில் வைக்கவும்.

 

6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கட்லெட்'டை இருபுறமும் நன்றாக வறுத்து எடுக்கவும்.

 

7. சுவையான பன்னீர் கட்லெட் தயார். தக்காளி கெட்சபுடன் சூடாக பரிமாறவும்.


------******------

தவா பர்கர்


தேவையான பொருட்கள்:


பர்கர் பன்

வெண்ணெய்

பெரிய வெங்காயம்         - 1 நறுக்கியது

பச்சை குடைமிளகாய்      - 1 நறுக்கியது

தக்காளி                                - 2 நறுக்கியது

பன்னீர்                                  - 200 கிராம்

மோஸ்ரெல்லா சீஸ்           - 1 கப் துருவியது

பூண்டு                                   - 2  பற்கள் நறுக்கியது

இஞ்சி                                     - 1 சிறிய துண்டு நறுக்கியது

சாட் மசாலா தூள்               - 1 தேக்கரண்டி  

செஸ்வான் சாஸ்                 - 2 தேக்கரண்டி  

கொத்தமல்லி இலை நறுக்கியது

உப்பு                                         - 1 தேக்கரண்டி  


 

செய்முறை:

 

1. கடாயில் வெண்ணையை சூடாக்கி, இதில் பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை குடைமிளகாய், தக்காளி சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் கிண்டவும்.

 

2. இதில் உப்பு, சாட் மசாலா தூள், செஸ்வான் சாஸ் சேர்த்து கிண்டவும். 

. மசாலா நன்கு கலந்ததும், இதில் பன்னீர் மற்றும் மோஸ்ரெல்லா சீஸ் சேர்த்து கிளறவும்.

 

3. கடைசியாக இதில் கொத்தமல்லி இலை சேர்த்து கிண்டவும்.

 

4. பர்கர் பன்'னை முக்கால் அளவு நறுக்கவும்.

 

5. இதில் செய்த பன்னீர் கலவையை வைத்து இறுக்கமாக அழுத்தவும்.

 

6. தோசை தவா'வில் வெண்ணெய், பெரிய வெங்காயம், சாட் மசாலா தூள், கொத்தமல்லி இலை, மோஸ்ரெல்லா சீஸ் செஸ்வான் சாஸை ஊற்றி, செய்த பர்கர் பன்'னை ரோல் செய்யவும்.

 

7. சுவையான தவா பர்கர் தயார். 


                                                    ------******------

 

ஹைதராபாத் பன்னீர் மசாலா



தேவையான பொருட்கள்


மசாலா விழுது அரைக்க


எண்ணெய்                 - 1 மேசைக்கரண்டி

பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, சீரகம்

பெரிய வெங்காயம் - 2 நறுக்கியது

பூண்டு                           - 7 பற்கள்

இஞ்சி                             - 1 துண்டு

பச்சை மிளகாய்         - 4

தக்காளி                        - 4 நறுக்கியது

பசலை கீரை                - கையளவு

கொத்தமல்லி இலை

தண்ணீர்


பன்னீர் மசாலா செய்ய


பன்னீர்                 - 200 கிராம்

நெய்                     - 1 மேசைக்கரண்டி

எண்ணெய்         - 1 மேசைக்கரண்டி

 

அரைத்த மசாலா விழுது

கடைந்த தயிர்                  - 1 1/2 மேசைக்கரண்டி

பிரெஷ் கிரீம்                     - 1 1/2 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்                      - 1/4 தேக்கரண்டி

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தனியா தூள்                      - 1 தேக்கரண்டி

சீரக தூள்                             - 1 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்             - 1 தேக்கரண்டி

கசூரி மேத்தி

உப்பு                                     - 1 தேக்கரண்டி

தண்ணீர்


செய்முறை


மசாலா விழுது அரைக்க

 

1. அகல கடாயில், எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சீரகம், பெரிய வெங்காயம் போட்டு கிளறவும்.

 

2. அடுத்து இதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்.

 

3. இதனுடன், பசலை கீரை மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.

 

4. 10 நிமிடம் கழித்து, மசாலாவை ஆறவைத்து, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

 


பன்னீர் மசாலா செய்ய

 

5. கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி, அரைத்து விழுதை சேர்த்து வதக்கவும்.

 

6. 2 நிமிடம் கழித்து, இதில் கடைந்த தயிர் மற்றும் பிரெஷ் கிரீம் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

 

7. அடுத்து இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், சீரக தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.

 

8. இதில் சிறிது தண்ணீர் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை, கடாயை மூடி கொதிக்கவிடவும்.

 

9. அடுத்த இதில் நறுக்கிய பன்னீர் துண்டுகளை போட்டு, தண்ணீர் ஊற்றி கிளறவும்.

 

10. இறுதியாக இதில் கரம் மசாலா தூள், கசூரி மேத்தி, சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

 

11. ஹைதராபாத் பன்னீர் மசாலா தயார். 



------******------

 

பன்னீர் ரோல்


தேவையான பொருட்கள்:


பன்னீர்                              - 250 கிராம்

தயிர்                                  - 1 கப்

இஞ்சி பூண்டு விழுது     - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் விழுது - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள்                   - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்                      - 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்            - 1/2 தேக்கரண்டி

சீரக தூள்                             - 1/2 தேக்கரண்டி

ஆம்சூர் தூள்                       - 1/2 தேக்கரண்டி

பச்சை குடைமிளகாய்     - நறுக்கியது 

கொத்தமல்லி இலை நறுக்கியது 

எலுமிச்சைபழச்சாறு         - 1/2 தேக்கரண்டி

உப்பு  

எண்ணெய்                            - 1 மேசைக்கரண்டி

சப்பாத்தி                               - 2

புதினா சட்னி

வெங்காயம் நறுக்கியது


செய்முறை:

 

1. ஒரு கிண்ணத்தில் தயிர், இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், உப்பு, நறுக்கிய குடைமிளகாய், கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும். 

 

2. அடுத்து பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

 

3. ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் தயிர் பன்னீர் கலவையை சேர்த்து, கலவை கெட்டியாகும் வரை வேகவைக்கவும்.

 

4. சப்பாத்தியை எடுத்து புதினா சட்னியை தடவவும், அதன் மேல் மசாலா பன்னீரை வைத்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.

 

5. சப்பாத்தியை, பாயில் பேப்பரில் சுற்றி பரிமாறவும்.


------******------ 

செஸ்வான் பன்னீர் பைட்ஸ் 


 

தேவையான பொருட்கள் 


மைதா                      - 3 தேக்கரண்டி 

சோள மாவு             - 3 தேக்கரண்டி 

உப்பு                         - தேவையான அளவு 

மிளகு தூள்

தண்ணீர் 

பன்னீர்                     - 200 கிராம் 

எண்ணெய் 

பூண்டு                      - 1 தேக்கரண்டி நறுக்கியது 

இஞ்சி                        - 1 தேக்கரண்டி நறுக்கியது 

வெங்காயம்          - 1 நறுக்கியது 

பச்சை குடைமிளகாய் - 1 நறுக்கியது 

வினிகர்                   - 2 தேக்கரண்டி 

சோயா சாஸ்         - 2 தேக்கரண்டி 

தக்காளி கெட்சப் - 2 தேக்கரண்டி 

செஸ்வான் சாஸ் - 3 தேக்கரண்டி 

வெங்காயத்தாள் நறுக்கியது 


செய்முறை: 

 

1. பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு மற்றும் மிளகு தூள் போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கட்டி இன்றி கரைக்கவும். 

 

2. இதில் பன்னீர் துண்டுகளை போட்டு பிரட்டவும். 

 

3. சூடான எண்ணையில், பன்னீர் துண்டுகளை போட்டு பொரிக்கவும்.

 

 

4. அகல கடாயில், எண்ணெய் ஊற்றி, பூண்டு, இஞ்சி, வெங்காயம், குடைமிளகாய் போட்டு 2 நிமிடம் ப்ரை செய்யவும்.

 

5. அடுத்து இதில் வினிகர், சோயா சாஸ், தக்காளி கெட்சப், செஸ்வான் சாஸ் சேர்த்து கிளறவும்.

 

 

6. பின் இதில் பொரித்த பன்னீர் துண்டுகளை போட்டு நன்கு கிளறவும்.

 

 

7. செஸ்வான் பன்னீர் பைட்ஸ் தயார். 


------******------

 பன்னீர் புர்ஜி 


தேவையான பொருட்கள்:


எண்ணெய்          - 1 மேசைக்கரண்டி  நெய் - 1 தேக்கரண்டி 

சீரகம்                            - 1/2 தேக்கரண்டி 

சோம்பு                         - 1/2 தேக்கரண்டி 

பெரிய வெங்காயம்  - 2 பொடியாக நறுக்கியது

பச்சை மிளகாய் - 2 நறுக்கியது  

குடைமிளகாய்            - 1 நறுக்கியது

இஞ்சி                             - 1 துண்டு

பூண்டு                           - 3 பற்கள்

தக்காளி                        - 1 பொடியாக நறுக்கியது

உப்பு                               - 1 தேக்கரண்டி 

மஞ்சள் தூள்                 - 1/4 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி  

சீரக தூள்                        - 1 தேக்கரண்டி 

தனியா தூள்                  - 1 தேக்கரண்டி 

பன்னீர்                            - 200 கிராம் 

கரம் மசாலா தூள்        - 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 1/2 பழம்

கொத்தமல்லி இலை


செய்முறை:

 

1. கடாயில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி, இதில் சீரகம், சோம்பு, பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.

 

2. வெங்காயம் பாதி வதங்கியதும் இதில் குடைமிளகாய் சேர்த்து கிளறவும்

அடுத்து இஞ்சி மற்றும் பூண்டை தட்டி, வெங்காய கலவையுடன் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும்.

 

3. விழுதின் பச்சை வாசனை போன பின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

 

4. இதில் உப்பு, மஞ்சள்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் ஆகியவற்றை போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும்.

 

5. மசாலாவின் பச்சை வாசனை முழுமையாக போனபின், உதிர்த்த பன்னீரை போட்டு கிளறவும்.

 

6. இறுதியாக கரம்மசாலா தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.



 

Post a Comment

0 Comments