முட்டை புர்ஜி பாவ்
முட்டை மசாலா பாவ்
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
பச்சை மிளகாய் - 1 நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தக்காளி - 2 நறுக்கியது
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பாவ் பாஜி மசாலா தூள் - 2 தேக்கரண்டி
முட்டை - 6
கொத்தமல்லி இலை நறுக்கியது
வெண்ணெய்
பாவ் பன்
செய்முறை:
1. அகல கடாயில் எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
2. வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.
3. அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
4. தக்காளி வதங்கியதும், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா தூள் சேர்த்து கிளறவும்.
5. இதில் முட்டைக்ளை உடைத்து சேர்த்து கிண்டவும்.
6. முட்டை வெந்ததும், கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி இறக்கவும்.
7. தவாவில் வெண்ணெய் போட்டு, பாவ் பன்'களை டோஸ்ட் செய்யவும்.
8. டோஸ்ட் செய்த பன்'னில், முட்டை பொரியல் வைத்து பரிமாறவும்.
சுவையான முட்டை பொரியல் பாவ் தயார்.
0 Comments