ஆன்மீக ஸ்லோகங்கள்
பகையை அழிக்கும்
ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம்
ஆதித்யா என்றால் சூரியனை குறிக்கும். ஹ்ருதயம் என்றால் இதயத்தைக் குறிக்கும். ஆதித்ய
ஹ்ருதயம் என்பது சூரியபகவானின் இதயத்தைத் தொடக்கூடியதாகும்.
நாம் கண்ணால் பார்க்கக் கூடிய தெய்வமும் சூரிய பகவானே…
. இந்த ஸ்லோகத்தை ஞாயிறு தோறும் அல்லது தினமும் உச்சரித்து வந்தால் எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடலாம்.
ஆதித்ய ஹ்ருதயம் சூரியனைக் குறித்த ஒரு துதி. இது விசேஷ மந்திரங்கள் அடங்கிய தொகுப்பு!
ராமர் இந்த மந்திரத்தை ஓதி ராவணனை வெற்றி கொண்டார்.
ஸ்ரீராமர் ராவணனை எதிர்த்து போர் புரிந்த பொழுது, அகஸ்திய மாமுனிவர் ராமருக்கு உபதேசித்த சக்தி வாய்ந்த மந்திரமே ஆதித்ய ஹ்ருதயம்
ஆதித்ய ஸ்ருதயம் தரும் பலன்கள்
பலம் பொருந்திய எதிரியை அழிக்க வழி வகுத்தது. ஆதித்ய ஹ்ருதயம், எதிரி அழியத் தகுந்த உபாயங்களைத் தானே கண்டு பிடித்து அழிக்கும் மந்திரம் ஆதித்ய ஹ்ருதயம்.
ஆதித்ய ஹ்ருதயம் பாடல் வரிகள்:
பூர்வாங்க ஸ்தோத்ரம்
ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமிதா பாபக்லேஷ துக்கசஸ்ய நாஷம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||
பொருள்: ஸ்ரீ ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். ஏழு உலகங்களுக்கும் (பூலோகம், புவர் லோகம், ஸ்வர் லோகம்,
மஹர லோகம், ஜனர் லோகம், தபோ லோகம்,
ஸத்ய லோகம்) நீ
ஒளியேற்றும் விளக்காக இருக்கிறாய். உன்னிடமிருந்து
பரவும் ஒளிக்கதிர்கள் துக்கங்களையும் கவலைகளையும் போக்கும். உனது கிரணங்கள் எம்மை ஆட்கொள்கின்றன. நீயே முதல்வன். முதன்மையானவன். ஸகல உலகங்களும் உனை வணங்கும். ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.
ததோ யுத்தப் பரிச்ராந்தம் ஸமரே சிந்தயாஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தைவதைச்சஸமாகம்ய த்ருஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத்ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: (1)
பொருள்: ராம ராவணசுர யுத்தம் முடிவுறும் தருவாயில்,
ராமனுக்கு சோர்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில்,
ராவணாசுரன் வல்லமை படைத்தவனாக தென்பட்டான். போர்க்களத்தின் வாயிலிலே, அகஸ்த்ய முனிவர், ராமபிரானை சந்தித்தார். அவரது சோர்ந்த நிலையைக் கண்டு பின்வருமாறு கூறினார்.
ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி (2)
பொருள்:
பலமான ஆயுதம் பொருந்திய ராம பிரானே,
சத்ருக்க்ளை தோற்கடித்து போரில் வெல்வதற்கான நிரந்தரமான தீர்வை உனக்கு இப்போது சொல்கிறேன்.
ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம் (3)
பொருள்: ஆதித்ய ஹ்ருதயம் ஒரு புண்ணிய மிக்க மந்திரம் ஆகும். எதிரிகளை வீழ்த்தும். தினமும் பக்தியுடன் அதை பாராயணம் செய்பவர்களுக்கு நிரந்தரமான முழுமையான வெற்றிகள் கிட்டும்.
ஸர்வமங்கல மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம் (4)
பொருள்:
ஸர்வ ஸௌபாக்யங்களையும்
அளிக்கும்; ஸர்வ பாபங்களையும் அழிக்கும்; சிந்தையில் உள்ள கவலைகளை ஒழிக்கும்; ஆயுளை அதிகரிக்கும்.
ரச்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் (5)
பொருள்:
ஸூர்ய பகவான் தனது பொன்னான கிரணங்களை எங்கும் பரப்புகிறார். தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப் படுகிறார். திவ்யமான ஒளியின் வண்மையால் அண்ட சராசரத்திற்க்கும் அதிபதியாக விளங்குகிறார்.
ஸர்வதேவாத்மகோ ஹ்யேஷ தேஜஸ்வீ ரச்மிபாவன:
ஏஷ தேவாஸுரகணான் லோகான் பாதி கபஸ்திபி: (6)
பொருள்:
ஸூர்ய பகவான் தனது ஒளிமிக்க கிரணங்களால், தேவர்களும் அசுரர்களும் கூட
அடங்கிய எல்லா உலகங்களையும் காப்பாற்றுகிறார்.
ஏக்ஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ: யம: ஸோமோ ஹ்யமாம் பதி: (7)
பொருள்:
ஸூர்ய பகவானே ப்ரம்மன்,
விஷ்ணு, சிவன், ஸ்கந்தன்,
காலன், ப்ரஜாபதி, மஹா
இந்த்ரன், யமன், சந்த்ரன்,
குபேரன் மற்றும் வருணன்.
பிதரோ வஸவ: ஸாத்யா ஹ்யச்வினௌ மருதோ மனு:
வாயுர்வஹ்னி:ப்ரஜாப்ராண ருதுகர்த்தா ப்ரபாகர: (8)
ஸூர்ய பகவானே பித்ரு,
வசு, தனங்களை அளிப்பவர்,
தெய்வாம்ஸமுள்ள யோகிகள், தேவர்கள்,
தேவலோக வைத்தியர்கள், மனு,
வாயு, அக்னி ஆவார். அவரே எல்லா பருவங்களையும் சீதோஷ்ணங்களையும்
ஷ்ருஷ்டிக்கிறார். எல்லா உயிர்களையும் காக்கிறார். தனது ஒளியால் ஞானத்தை கொடுக்கிறார். உதயத்தை ஏற்படுத்துகிரார்.
ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸுவர்ண – ஸத்ருசோ பானுர்-ஹிரண்யரேதோ திவாகர: (9)
பொருள்:
ஸூர்ய பகவான் அதிதியின் புதல்வன். அதிதி தேவி தேவர்களுக்கெல்லாம்
தாய். அண்ட சராசரங்களையும் படைத்தவள். தங்கத்திற்கு நிகரான ஒளியைக் கொண்டவள். அவளே எல்லா உலகங்களுக்கும் வாழ்வாதாரம். அவளே விடியலின் தேவதை.
ஹரிதச்வ: ஸஹஸ்ரார்சி: ஸப்தஸப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்புஸ் த்வஷ்டா மார்த்தாண்ட அம்சுமான் (10)
பொருள்:
ஸூர்ய பகவான் ஆயிரம் கிரணங்களை உடையவர். ஏழு
பசுமஞ்சள் நிறமுடைய குதிரைகளை உடையவர். இருளை அகற்றுகிறவர். துரத்ரிஷ்டத்தை
விரட்டுகிறவர். தனது கிரணங்களை எங்கும் நிறைக்கிரார். எங்கும் நிறைந்திருக்கிரார்.
ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதே: புத்ர: சங்க: சிசிரநாசன: (11)
பொருள்:
ஸூர்ய பகவான் சூக்ஷ்ம ஸரீரமுள்ளவர். கடுங்குளிரை அகற்றுபவர். நெருப்பே உருவானவர். தீய எண்ணங்களையும் தீமைகளையும் அகற்றுபவர்.
வ்யோமநாத ஸ்தமோபேதீ ருக்யஜுஸ்ஸாமபாரக:
கனவ்ருஷ்டிரபாம் மித்ரோ விந்த்யவீதிப்லவங்கம: (12)
பொருள்: ஸூர்ய பகவான் அஞ்ஞான இருளை அகற்றி தீமைகளையும் மரண
பயத்தையும் போக்குகிறார். வேதங்களை கரை கண்டவர். மழையை பொழிவிக்கிறார். நீர் நிலைகளை நேசிக்கிறார். விந்த்ய மலைகளை தெய்வீகமாக கடக்கிறார்.
ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கள ஸர்வதாபன:
கவிர்விஷ்வோ மஹாதேஜா ரக்த ஸர்வபவோத்பவ: (13)
பொருள்: ஸூர்ய பகவான் அண்ட வெளியின் ஆசான். அவரே வெப்பத்தை கொடுக்கிறார். உயிர்களின் முதலும் முடிவும் அவரே. அவரே அகிலத்தை இயக்குகிறார். எங்கும் நிறைந்து இருக்கிறார். அவரது செங்கதிர்கள் உலகத்தை உயிரினங்களை வாழ வைக்கின்றன.
நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விஷ்வ பாவன:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஷாத்மன் நமோஸ்துதே (14)
பொருள்: ஸூர்ய பகவான் நக்ஷத்ரங்களுக்கும் க்ரஹங்களுக்கும் தலைவர். அவரே இந்த அகிலத்தை உருவாக்கிக் காக்கிறவர். கதிரவனின் பன்னிரெண்டு (தத, அர்யாமா, மித்ரா, வருணா, இந்த்ரா, விவஸ்வன், த்வஷ்டா, விஷ்ணு, அம்ஷுமான், பாகா, புஷா, பரஞ்ஜா) உருவிலும் ஒளி மயமாக இருக்கிறார். ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம்.
நம: பூர்வாய கிரயே பஷ்சிமாயாத்ரயே நம:
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம: (15)
பொருள்: ஸூர்யன் உதிக்கும் கிழக்கு மலைகளுக்கும் ஸூர்யன் அஸ்தமிக்கும் மேற்கு மலைகளுக்கும் நமஸ்காரம். வானுலகில் உள்ள அனைத்து தேவதைகளுக்கும் தினமும் உதிக்கும் நாளுக்கும் அவரே அதிபதி.
ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஷோ ஆதித்யாய நமோ நம: (16)
பொருள்: வெற்றியாளனுக்கு நமஸ்காரம். அந்த வெற்றியால் கிட்டும் அனைத்து செல்வங்களுக்கும் நமஸ்காரம். ஆயிரம் கதிர்களுடையவனுக்கு நமஸ்காரம். அதிதியின் புத்ரனுக்கு நமஸ்காரம்.
நம: உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: (17)
பொருள்: மிகுந்த உக்கிரமும் தைரியமும் வாய்ந்தவனுக்கு நமஸ்காரம். தடைகளற்றவனுக்கு நமஸ்காரம். தாமரையை மலரச் செய்பவனுக்கு நமஸ்காரம். வல்லமை கொண்ட ஸூர்யனுக்கு நமஸ்காரம்.
ப்ரமஹேஷான் அச்யுதேஷாய ஸூர்யாய ஆதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷெ நம: (18)
பொருள்: அதிதியின் புத்ரனாகிய ஸூர்ய பகவானே ப்ரம்மா, ஷிவன், விஷ்ணு ஆவார். அவருக்கு நமஸ்காரம். எங்கும் வியாபித்து எங்கும் நிறைந்திருக்கும் பேரெழிலானவருக்கு நமஸ்காரம்.
தமோக்னாய ஹிமாக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே
க்ரதக்னாக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: (19)
பொருள்: இருளையும் குளிரையும் போக்கி எதிரிகளை என்றும் அழிக்கும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம். செய் நன்றி மறத்தலை அகற்றி ஒளியால் திகழும் ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.
தப்தசாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே
நமஸ்தமோபினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே (20)
பொருள்: ஸூர்ய பகவான் ஒளிப்பிழம்பானவர். அவருக்கு நமஸ்காரம். அவரே உலகத்தை வடிவமைத்தவர். இருளை அகற்றி உலகத்தோர் காணும் வண்ணம் அமைந்துள்ள ஸூர்ய பகவானுக்கு நமஸ்காரம்.
நாஷயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ரஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: (21)
பொருள்: ஸூர்ய பகவானே இந்த உலகத்தை உருவாக்கி, காத்து ரக்ஷிப்பவர். அழிக்க வல்லவரும் அவரே. அவருக்கு நமஸ்காரம். அவரது அபரிமிதமான ஒளியாலேயே மழையைத் தருகிறார். அவரே இவ்வுலகை ஆள்கிறார்.
ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டித:
ஏஷ ஏவாக்னிஹோத்ரம்ச பலம் ச்சைவாக்னி ஹோத்ரிணாம். (22)
பொருள்: உலகத்து உயிர்களெல்லாம் உறங்கும் போதும் ஸூர்ய பகவான் விழித்து இருக்கிறார். அவர் அக்னியால் ஹோமம் செய்கிறார். அவரே அக்னி. அக்னி ஹோமத்தின் கனிகளும் பலனும் அவரே.
வேதஷ்ச க்ரத்வஷ்ச்சைவ க்ரதூனாம் பலமேவச
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: (23)
பொருள்: ஸூர்ய பகவான் வேதங்களின் சாரத்தில் இருக்கிறார். தத்தம் கடமைகளை உண்மையுடன் செய்பவர்களுக்கு, கடமையின் பலனாக இருக்கிறார். வல்லமை பொருந்திய ஸூர்ய பகவானே எல்லா செயல்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
ஏனமாபத்ஸு க்ருச்ரேப்ஷு கான்தார்யேஷு பயேஷுச
கீர்த்தயன்புருஷ: கஷ்சின்னாவசீததி ராகவா (24)
பொருள்: ஓ ராகவனே! அவமானத்திலோ, பயத்திலோ, துன்பத்திலோ இருப்பவர்கள் ஸூர்ய தேவனின் நாமத்தை ஜபித்தால், நிச்சயமாக அவற்றிலிருந்து மீண்டு வருவார்கள்.
பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயஷ்யஷி (25)
பொருள்: தேவர்களின் அதிபதியும் இந்த உலகின் அரசனுமான ஸூர்ய பகவானை முழுமையான அர்ப்பணிப்போடு வணங்க வேண்டும். இந்த ஆதித்ய ஹ்ருதய ஸ்லோகத்தை மும்முறை ஜபித்தால் வாழ்வின் எல்லா போர்களிலும் வெற்றி கிட்டும்.
அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி
ஏவமுக்த்வா தடாகஸ்த்யோ ஜகாமச்ச யதாகதம் (26)
பொருள்: அக்ஸ்த்ய முனிவர், தான் கிளம்பும் முன், ராமபிரானைப் பார்த்து இவ்வாறு கூறினார்: ஓ ராமா, வலிமையான தோள்கள் உள்ளவனே, இந்த க்ஷணம் முதல், ராவணனை நிச்சயமாக வெற்றி கொள்வாய்.
ஏதச்சுர்த்வா மஹாதேஜா நஷ்டஷொகோ பவத்தத
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ ப்ரயதத்மவான் (27)
பொருள்: அக்ஸ்த்ய முனிவரின் மொழிகளைக் கேட்ட ஸ்ரீராமன், தனது துன்பங்களையும் கவலைகளையும் துறந்தான். தனக்கு மிகப் பெரிய பலம் வந்து சேர்ந்ததைப் போல உணர்ந்தான்.
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான்
த்ரிராசம்ய ஷுசிர்போத்வா தனுராத்யாய வீர்யவான் (28)
பொருள்: ஸ்ரீராமன் ஸூர்ய பகவானைப் பார்த்து இந்த ஸ்லோகத்தைச் சொன்னார். வீறு பெற்றார். மும்முறை நீரை அருந்தி தன்னை சுத்தி செய்து கொண்டு, வீரத்துடன் தந்து வில்லை எடுத்தார்.
ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபாகமத்
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் (29)
பொருள்: யுத்தக் களத்தில் ராவணனைக் கண்ணுற்ற ஸ்ரீராமன், அவனைக் கொல்லும் பொருட்டு முன்னேறினான்.
அத ரவிரவதந் நிரீக்ஷ்ய ராமம் முதித மனா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிசிசரபதி ஸம்க்ஷயம் விதித்வா ஸுரகண மத்யகதோ வசஸ் த்வரேதி (30)
பொருள்: அப்பொழுது தேவகணங்களின் நடுவிலிருந்த சூரிய பகவான், உவகை பூத்து உள்ளக் களிப்புடன் ஸ்ரீராமரை நோக்கி, ‘ராவண வதத்தை துரிதமாய் முடி’ என்று உபதேசித்து ஆசிர்வதித்தார்.
சூரிய பகவானின் அருளும் ஆசீர்வாதமும் தங்களுக்குக் கிடைக்கட்டும்!
நன்றி!
0 Comments