சுவையான அடை தோசை
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 100 கிராம்
இட்லி அரிசி - 100 கிராம்
பாசிப்பருப்பு - 25 கிராம்
துவரம்பருப்பு - 25 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
பச்சைப் பயறு - 25 கிராம்
காய்ந்த
ஒரு முழு பூண்டு - 7
முருங்கை இலை - 1கைப்பிடி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 ஸ்பூன்
கடுகு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 ஸ்பூன்
வெள்ளை உளுந்து - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - தேவையானவை
சமையல் எண்ணெய் - தேவையானது
செய்முறை:-
அரிசி பருப்புகளை நன்றாக கழுவி
2 மணி நேரம் ஊற வைக்கவும்
ஊறிய அரிசி பருப்பை கிரைண்டரில்
போட்டு கொரகொரப்பாக அரைத்து
எடுக்கவும்
மிக்ஸியில் சோம்பு காய்ந்த மிளகாய்
பூண்டை தோலுடன், சிறிய துண்டு இஞ்சி
சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு
மைய அரைக்கவும் அரைத்த அரிசி பருப்பு
மாவுடன் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி
வழித்தெடுக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து
ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி
கடுகு உளுந்து சீரகம் பெருங்காயத் தூள்
தாளித்து, பொடியாக நறுக்கிய
வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
பின் அதில் முருங்கைக் கீரை சேர்த்து
வதக்கவும்.
வதக்கிய வெங்காயத்தை அரைத்த
மாவுடன் சேர்த்து மஞ்சத்தூள்
கொத்தமல்லி கறிவேப்பிலை
தேங்காய்த் துருவல் தேவையான உப்பு
சேர்த்து மாவை நன்றாக கலக்கவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானதும்
மாவை ஊற்றி கரண்டியால் தோசையாக
வார்க்கவும் எண்ணெய் ஊற்றி இரண்டு
புறமும் நன்றாக வேக விட்டு முறுகலாக
எடுக்கவும்.
சத்து நிறைந்த அடை தோசை ரெடி தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் பரிமாறவும்.
அருமையாக செய்து ருசித்து கருத்துக்கள் சொல்லுங்கப்பா...
🌮🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌮
0 Comments