சூரிய நமஸ்காரம்
சூரிய நமஸ்காரம் என்பது பன்னிரண்டு ஆசனங்கள் ஒன்றிணைந்துள்ளதாகும்...
நமது முன்னோர்கள் தந்த ஒரு அற்புதமான வரப்பிரசாதம். சூரிய நமஸ்காரம்...
ஆசனம் செய்யும்
முன் கவனத்தில் கொள்ளவேண்டியவை:
* சூரியன் இருக்கும் திசையை நோக்கி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். கண்ணைக் கூசுகிற, சுட்டெரிக்கிற நேரத்தில் செய்யக் கூடாது. மிதமான வெளிச்சம் இருக்கிற அதிகாலை நேரம், சூரியன் மறைகிற மாலை நேரம் நல்லது.
* டீ, காபி போன்ற பானங்கள் அருந்தியிருந்தால் 20, 30 நிமிடங்களுக்குப் பிறகும், டிபன் போன்ற எளிய உணவு சாப்பிட்டிருந்தால் 2 மணிநேரத்துக்குப் பிறகும், முழு உணவு சாப்பிட்டிருந்தால் 4 மணி நேரத்துக்குப் பிறகும் சூரிய நமஸ்காரம் செய்யலாம். வயிறு காலியாக இருப்பது அவசியம். சூரிய நமஸ்காரத்துக்கு நடுவிலோ, செய்து முடித்த உடனேயே தண்ணீர் குடிக்கக் கூடாது. செய்து முடித்த சிறிது நேரத்துக்குப் பிறகு அருந்தலாம். சுமார் 1 மணி நேர இடைவெளிக்குப் பிறகு குளிக்கலாம்.
சூரிய நமஸ்காரம் செய்யும் முறை
1. பிராணாமாசனம் (அ) நமஸ்கார முத்ரா:
If
விரிப்பில் இரண்டு கால்களுக்கிடையே ஒரு அடி இடைவெளி இருக்கும்படி நேராக நிமிர்ந்து நின்று, இரு கைகளையும் மார்புக்கு நேராக குவித்து, நமஸ்காரம் செய்வது போல கைகளை ஒன்றாக சேர்த்து, மூச்சை நன்றாக உள்ளிழுத்து, பின், மிக மெதுவாக மூச்சை வெளியிடவும். இதேநிலையில் பத்துவரை எண்ணவும்...
2. ஊர்த்துவாசனம்:
3. பாத ஹஸ்தாசனம்:
மூச்சை மெதுவாக வெளியே விட்டபடி, கைகளை உயர்த்தியவாறே குனிந்து கைகளின் நடுவிரலால் கால் பெருவிரலைத் தொடவேண்டும். முடிந்தால் கைகள் தரையை தொடும்படி வைத்துக் கொள்ள வேண்டும். தலை வளைந்து, மூக்கும், நெற்றியும் முழங்காலை முட்ட முயலட்டும். முழங்கால் வளையாமல் செய்ய வேண்டும். இதேநிலையில் பத்துவரை எண்ணவும்.
4. அஸ்வ சஞ்சலனாசம்:
மூச்சை உள்ளிழுத்தபடி, வலது காலை பின்னோக்கி நீட்டவும், இடது காலை முன்னோக்கி வைத்து, இரண்டு கைகளையும் தரையில் ஊன்றி, தலையை மேலே துாக்கி மேல் நோக்கி பார்க்கவும். இதேநிலையில் பத்துவரை எண்ணவும்.
5. பர்வதாசனம் (அ)மேரு ஆசனம்:
மூச்சை வெளியே விட்டபடி, இரண்டு கைகளையும் ஊன்றியபடி, மெதுவாக வலதுகாலுக்கு இணையாக இடதுகாலையும் பின்னோக்கி நீட்ட வேண்டும். இரண்டு கால்களை பின்னே வைத்தும், இரண்டு கைகளை முன்னே வைத்தும், இடுப்பை மேலே துாக்கி, உடலை மேலே உயர்த்தி, உட்புறம் V வடிவில் முழு உடம்பும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பாதங்கள் இரண்டும் தரையில் நன்கு பதிந்திருக்க வேண்டும். இதேநிலையில் பத்துவரை எண்ணவும்.
6. புஜங்காசனம்:
மூச்சை உள்ளிழுத்து, தரையில் குப்புறப்படுத்து,
தலையை துாக்கி, முதுகை பின்னால் இடுப்பின் பலத்தில் வளைக்க வேண்டும். முதுகு தண்டு இப்போது வெளிப்புறமாக வளைகின்றது. உடலின் பளு முழுவதும் உள்ளங்கைகளிலும்,
கால் விரல்களிலும் இருக்கும். தோள்கள் காதுகளிலிருந்து விலகி இருக்கட்டும்.மேலே பாருங்கள்.
7. அஷ்டாங்க நமஸ்காரம்:
மூச்சை உள்ளிழுத்து, தரையில் சாஷ்டாங்கமாக படுத்துக் கொள்ள வேண்டும். இரு கால் விரல்கள்,
இரு முழங்கால்கள், மார்பு, நெற்றி,
இரு உள்ளங்கைகள் ஆக எட்டு அங்கங்களும், தரையை தொடும்படி இருக்க வேண்டும்.
8. புஜங்காசனம்:
மூச்சை உள்ளிழுத்து, தரையில் குப்புறப்படுத்து,
தலையை துாக்கி, முதுகை பின்னால் இடுப்பின் பலத்தில் வளைக்க வேண்டும். முதுகு தண்டு இப்போது வெளிப்புறமாக வளைகின்றது. உடலின் பளு முழுவதும் உள்ளங்கைகளிலும், கால் விரல்களிலும் இருக்கும். தோள்கள் காதுகளிலிருந்து விலகி இருக்கட்டும்.மேலே பாருங்கள்.
9.
பர்வதாசனம் (அ)மேரு ஆசனம்:
இது,
ஐந்தாம் நிலை போன்றதே.
மூச்சை உள்ளே நிறுத்தி,
இடுப்பை உயர்த்தி, கைகளை தரையில் நன்கு ஊன்றி, முழு ஓய்வும், தளர்ச்சியும்,
நாடி,
நரம்புகளுக்கும் கொடுக்க வேண்டும்.
10. அஸ்வ சஞ்சலனாசம்:
இது,
நான்காம் நிலை சார்ந்ததே.
கால்கள் மட்டும் மாறியிருக்கும்.
வலது காலை முன்னால் கொண்டு வருவதால்,
நாபிச் சக்கரம், பால் கோளங்கள், விந்து பைகள் சரிவர இயங்கும். மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே செய்ய வேண்டும்.
11. பாத ஹஸ்தாசனம்:
இது,
மூன்றாம் நிலை போன்றதே.
கைகள்,
பாதங்களுக்கு பக்கத்தில்; ஆனால்,
சற்று முன்னால் இருக்கட்டும்.
மூச்சை வெளியில் விட்டபடியே செய்ய வேண்டும்.
12.
ஊர்த்துவாசனம்:
இது,
இரண்டாம் நிலையே. மூச்சை நன்கு உள்ளிழுத்தப்படியே செய்ய வேண்டும்.
அடுத்து பிராணாமாசனம் (அ) நமஸ்கார முத்ரா
செய்து முடிக்கவேண்டும்.
முதல் நிலையே, இறுதியிலும் செய்ய வேண்டும்.
மூச்சை வெளியிடும்படி செய்ய வேண்டும்.
இந்த 12 நிலைகளையும் தொடர்ச்சியாக செய்து முடிப்பது ஒரு சூரிய நமஸ்காரம்.
இந்த சூரிய நமஸ்காரத்தை வீடியோவாக காண விரும்பினால் கீழே உள்ள யூடியூப் லிங்கில் சென்று பாருங்கள்.
சூரிய நமஸ்காரம் யூடியூப் லிங்க்
'ஓம்'
என்ற பிரணவ மந்திரத்தை உச்சரிக்கும் போது, மூலாதாரத்திலிருந்து நாதம் மேலோங்கி வரும். பீஜ மந்திரங்கள் ஆறு; சூரியனின் பெயர்கள் 12. இவற்றுடன்,
'ஓம்'
சேர்த்து சத்தமாக உச்சரித்தபடியே இந்த சூரிய நமஸ்காரத்தை செய்வது, நம் மனதை தட்டி எழுப்புவதற்கும், அதற்கு உரமூட்டுவதற்கும் உதவும்.
ஆசனம்,
பிராணாயாமம்,
மந்திரம் மற்றும் சக்கர தியானம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட யோகாசனமாகிய இந்த சூரிய வணக்க முறையை,
கொஞ்சம் கொஞ்சமாக பழகிக் கொண்டு, தினமும்,
10 நிமிடங்கள் ஒதுக்கினால், நம் உடல் ஆரோக்கியமான தேகமாக (வைரம் பாய்ந்த கட்டையாக) மாறி அமையும் என்பது நிச்சயம்.
தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது.
கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும்.
மொத்தத்தில் இளமை, ஆரோக்கியம், அழகு மூன்றும் ஒரே பயிற்சியில் கிடைப்பது வரம்..
தொடர்ந்து 45 நாட்கள் செய்து மாற்ற்த்தை உணருங்கள்... பிறகு விடவே மாட்டீர்கள்...
பயன்படுத்தி கருத்துகள் கூறுங்கள்...
நன்றி!
0 Comments