தேவையான
பொருள்:
எலும்பில்லா சிக்கன் - 1/2கிலோ
தயிர்- 3ஸ்பூன்
மிளகாய்ப் பொடி- 3ஸ்பூன்
இஞ்சி புண்டு விழுது- 2ஸ்பூன்
தக்காளி- 1பெரியது
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 100கிராம்
கார்ன்ஃப்ளவர்- சிறிது
கரம்மசாலா தூள் – 1 டீஸ்பூன்
மல்லித்தழை- சிறிது
செய்முறை:
§
சிக்கன்
துண்டுகளை கழுவி சுத்தம் செய்து அத்துடன் உப்பு, தயிர் இஞ்சி,பூண்டு விழுது, மிளகாய் பொடி,
கரம் மசாலா போட்டு
புரட்டி 10
நிமிடம் ஊற விடவும்.
§
ஒரு
பாத்திரத்தில் தண்ணீர் சிறிது ஊற்றி தக்காளியைப்
பொடியாக நறுக்கிப் போட்டு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த
தக்காளியை மசலா தடவிய கோழியுடன் சேர்ந்து பிசைந்து,
§
இத்துடன்
கார்ன்ஃப்ளவர், கோழியில்
நன்கு ஒட்டும் வரை தேவையான அளவு சேர்த்து
பிசிறிக் கொள்ளவும்.
§
எண்ணெயை
சூடாக்கி அதில் கார்ன்ஃப்ளவரில்
புரட்டி வைத்துள்ள சிக்கனைப் போட்டு மொறு மொறுப்பாக
பொரித்து எடுக்கவும்.
§ மல்லித்தழை தூவி பரிமாறுங்கள்.
😋😋😋😋😋😋
0 Comments