எலுமிச்சை சாதம்

 எலுமிச்சை சாதம்


எலுமிச்சை சாதம் தென்னிந்திய உணவில் பிரபலமான, எளிதில் செய்யக்கூடிய ஒரு ருசிகரமான வகை சாதமாகும்.


தேவையான பொருட்கள்: 


சாதம் - 1 கப்

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன் 

கடுகு - 1/4 டீஸ்பூன் 

முந்திரிப்பருப்பு - 1 ஸ்பூன் கொத்தமல்லி தழை - கொஞ்சம்

கருவேப்பிலை - 2 கொத்து 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன் 

உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

உப்பு தேவையான அளவு 

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 1 

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை - 1

இஞ்சி - 1/4 ஸ்பூன் 

வேர்க்கடலை - 1 ஸ்பூன்



செய்முறை:


வாணலியில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கால் டீஸ்பூன் கடுகு போட்டு பொரிந்ததும், அதில் இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு கொத்து கறிவேப்பிலை, அரை ஸ்பூன் கடலை பருப்பு அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு போட்டு குறைந்த தீயில் வறுத்துக்கொள்ளுங்கள்.


கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு ஓரளவு வறுபட்டதும், அதில் ஒரு ஸ்பூன் நிலக்கடலை சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.


கடலை எல்லாம் சேர்ந்து கொஞ்சம் நிறம் மாறவும், கால் ஸ்பூன் துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், முந்திரிப் பருப்பு, போட்டு இரண்டு முறை கிளறி விட்டு அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள், இரண்டு நிமிடம் கிளறிவிட்டு, 


எல்லாம் நன்றாக வதங்கி வரவும் ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டு அது லேசாக கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.


அடுப்பை அணைத்தவுடனே, தேவையான அளவு உப்பு சேர்த்து, பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்க்கவும்.


பிறகு சாதத்தை அதில் கொட்டி நன்றாக கிளறி அத்துடன் கொஞ்சம் கொத்தமல்லி தழை, இரண்டு சிட்டிகை துருவிய இஞ்சி சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.


சுவையான எலுமிச்சை சாதம் தயார்!


சிறு குறிப்புகள்:

1. சாதம் சேர்க்கும் முன் சூடாக இருக்கக்கூடாது – சூடான சாதத்தில் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் புளிப்பு சுவை மாறக்கூடும்.


2. மஞ்சள்தூள் தேவையான அளவில் மட்டும் சேர்க்கவும் – அதிகமாக சேர்த்தால் சாதத்தின் இயல்பான சுவை மாறும்.


3. எலுமிச்சைச் சாறு அடுப்பில் நீண்ட நேரம் வைக்க வேண்டாம் – கசப்பு ஏற்படும். அடுப்பை அணைத்த பிறகு சேர்க்கவும்.


4. நல்லெண்ணெய் அல்லது நிலக்கடலை எண்ணெய் சேர்க்கலாம் – நல்ல மணமும் சுவையும் கிடைக்கும்.

5. இத்துடன் உருளைக்கிழங்கு வறுவல், முட்டை மசாலா, சாம்பார், ஊறுகாய் ஆகியவற்றுடன் சாப்பிட மிகச் சிறந்தது.

🙏🙏🙏🍲🥗🍜🙏🙏🙏






Post a Comment

0 Comments