கருப்புஉளுந்து சாதம்

  கருப்புஉளுந்து சாதம்




தேவையான பொருட்கள்:

நெய் - 1 ஸ்பூன் 

உடைத்த கருப்பு உளுந்தம் பருப்பு - 1 கப்

புழுங்கல் அரிசி - 2 கப்

பூண்டு - 10 விருந்து 15

மல்லி விதை - 2 ஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 3 அல்லது 4

புளி - 5 முத்து அளவு

சீரகம் - 1 ஸ்பூன்

தேங்காய் - 4 , 5 துண்டு

உப்பு - தேவைக்கேற்ப 


தாளிக்க: 

கடுகு - 1 டீஸ்பூன்  

சீரகம் - 1 டீஸ்பூன்  

வரமிளகாய் - 2 

முந்திரிப்பருப்பு - 6

கடலைப்பருப்பு - ஒரு ஸ்பூன் பெருங்காயம் -1/4 டீஸ்பூன்

கருவேப்பிலை - ஒரு கொத்து


செய்முறை:

குக்கரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் உடைத்த கருப்பு உளுந்தம் பருப்பை சேர்த்து நன்கு வாசம் வரும் வரை வறுத்து தனியாக எடுத்து வையுங்கள்.


அரிசியையும், உளுத்தம்பருப்பையும் குறைந்தது அரை மணிநேரம் ஊற வையுங்கள். உளுத்தம்பருப்பு ஊற்றினால் தான் நன்றாக வேகும்.


அடுத்து தேங்காயை மிக்ஸியில் போட்டு துருவி வைத்துக் கொள்ளுங்கள்.


அதே குக்கரில் இரண்டு ஸ்பூன் மல்லி விதை, உங்கள் காரத்துக்கு ஏற்ப மூன்று அல்லது நான்கு காய்ந்த மிளகாய், ஐந்து முத்து அளவு புளி, ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து கிளறி ஆறவிட்டு கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.


குக்கரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் ஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் சீரகம் போட்டு வெடித்ததும், 2 வரமிளகாய், ஆறு முந்திரி பருப்பு, கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், பெருங்காயம் 1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து தாளித்து, 


அதில் சிறிது உப்பு சேர்த்து, அரைத்து வைத்த பொடியையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.


பின்பு அதில் ஊறவைத்த அரிசி, உளுந்தம்பருப்பு, போட்டு, நீளவாக்கில் நறுக்கிய பூண்டு, தேங்காய் துருவல் சேர்த்து கிளறுங்கள். 


பிறகு சாதம் வெந்துவரத் தேவையான தண்ணீர் ஊற்றி, ஒரு கொதி வரவும், உப்பு சரிபார்த்து குக்கரை மூடிவிடுங்கள்.


வழக்கம்போல விசில் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.


குக்கர் ஆறவும் மூடியைத் திறந்து நன்கு கிளறிவிட்டு திரும்பவும் மூடிவிடுங்கள்.


மிகவும் சுவையான கருப்பு உளுந்து சாதம் ரெடி.


குறிப்பு:

இந்த சாதத்திற்கு ஏற்றுத் துவையல், கத்தரிக்காய் கிச்சடி, வெங்காய மிளகாய் மண்டி மூன்றும் பொருத்தமாக இருக்கும்.

🙏🙏🙏🥗🙏🙏🙏





Post a Comment

0 Comments