கத்தரிக்காய் தயிர் கறி

  கத்தரிக்காய் தயிர் கறி




தேவையான பொருட்கள்: 

கத்தரிக்காய் - 1/4 கிலோ 

மிளகாய் தூள் - காயத்திற்கு ஏற்ப  

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

சிக்கன் மசாலா அல்லது

 மட்டன் மசாலா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவைக்கேற்ப


வறுக்க:

எண்ணெய் - 3 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

பெருங்காயத்தூள் - 1/4டீஸ்பூன்


தாளிக்க:

எண்ணெய் - 1 ஸ்பூன் 

தயிர் - 1 கப்

கடுகு - 1 ஸ்பூன் 

சீரகம் - 1 ஸ்பூன் 

பச்சை மிளகாய் - 2

கருவேப்பிலை - 2 கொத்து 

உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை:

கத்திரிக்காயை நன்கு கழுவி வட்டமாக ஸ்லைஸ் போல் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு தட்டில் மிளகாய்த்தூள், உப்பு, மஞ்சள் தூள், மட்டன் அல்லது சிக்கன் மசாலாவை நன்கு கலந்து, அதில் கத்தரிக்காயில் நன்கு பிரட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

தோசை கல்லில் அல்லது தவாவில் எண்ணெய் ஊற்றி, சீரகம் போட்டு அத்துடன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து, அதில் மிளகாய் தூளில் பிரட்டி வைத்த கத்திரிக்காய் ஸ்லைசை தனித்தனியாக பரப்பி வைக்கவும். கத்தரிக்காய் ஒரு பக்கம் வெந்ததும் அடுத்த பக்கம் திருப்பி வைக்கவும்.

கத்தரிக்காய் இருபுறமும் நன்றாக வறுபடவும், தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு கிண்ணத்தில் கெட்டியான தயிரை எடுத்து வைத்துக்கொண்டு அதில் உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் சீரகம் போட்டு வெடித்ததும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயையும், கருவேப்பிலையும் சேர்த்து நன்கு வதங்கவும், தாளித்தவற்றை தயிரில் போட்டு நன்கு கலந்து அதில் கத்திரிக்காயையும் போட்டு பிரட்டி விடவும்.

அல்லது சீராக அடுக்கி வைத்த வறுத்த கத்திரிக்காய் மேல் பரவலாக தாளித்த தயிரை ஊற்றுங்கள்.

சுவையான கத்திரிக்காய் தயிர் கறி ரெடி.


🙏🙏🙏🥗🙏🙏🙏


Post a Comment

0 Comments