தால் தட்கா Dal tadka

 தால் தட்கா



தேவையான பொருட்கள்:-


துவரம் பருப்பு - கால் கப்

 மசூர் பருப்பு - கால் கப்

சீரகம் - 1 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் - 2 

இஞ்சி துருவல் 

பூண்டு துருவல் - 1டேபிளஸ்பூன்

வெங்காயம் - 1 

பச்சை மிளகாய் - 2 

தக்காளி  - 2

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - ஒரு டேபிள் ஸ்பூன் 

மல்லித்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

கஸ்தூரி மேத்தி,

கருவேப்பிலை - தேவைக்கு

கொத்தமல்லித் தழை 

நெய் 

எண்ணெய் 

தண்ணி

 உப்பு - தேவைக்கு



செய்முறை:-


குக்கரில் பருப்பு, தண்ணீர், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் போட்டு வேக வைத்து எடுக்கவும்.


வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் எண்ணெய் ஊற்றி, அதில் சீரகம், காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு,

பொடியா நறுக்கின பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு கிளறி, 


வெங்காயம் பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய தக்காளியை போட்டுக் கிளறவும். சிறிது உப்பு சேர்த்து கிளறவும். 


தக்காளி நன்கு வதங்கியதும்.


நெருப்பின் அளவை சிம்மில் வைத்து, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.


இரண்டு நிமிடம் நன்கு கிளறிய பிறகு அதில் வேக வைத்த பருப்பு சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும்.


பருப்பு கொதிக்க ஆரம்பித்ததும் நெருப்பை குறைத்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.


பிறகு அதில் நறுக்கிய கொத்தமல்லி தலையை போட்டு, நன்கு கலந்து விட்டு பிறகு சிறிது கஸ்தூரி மேத்தி போட்டு கலந்து, அடுப்பில் இருந்து இறக்கவும்.


தாளிப்பதற்காக வாணலியில் சிறிது நெய் ஊற்றி, சீரகம் காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் போட்டுக்கு மடுப்பை அணைத்துவிட்டு சிறிது கருவேப்பிலையும் போட்டு பருப்பில் கொட்டவும்.


சூடாக பரிமாறவும்.




Post a Comment

0 Comments