ஜீவன் என் ஜீவன் எனை

 




ஜீவன் என் ஜீவன் 

எனை நீங்கி போகலாமா

காதல் என் காதல் 

அது ஏங்கி போகலாமா

விரலோடு பகல் இன்று 

பிடிவாதம் தனைகொண்டு

இனை தீயில் வீழலாமா


ஜீவன் என் ஜீவன் 

எனை நீங்கி போகலாமா

காதல் என் காதல் 

அது ஏங்கி போகலாமா


வானம் வேறு மேகம் வேறு 

பிரித்து பார்க்க கூடுமா

நீயும் நானும் வேறு வேறென்று 

பிரிக்க நெஞ்சம் தாங்குமா

தாமரையை நீர் தொடாததால் சொந்தமின்றி போகுமா

உதடுதானே பொய்கள் பேசும் 

உயிரும் பொய்கள் பேசுமா

நிழல் எது நிஜம் எது 

அறியாது இளமாது


ஜீவன் என் ஜீவன் 

எனை நீங்கி போகலாமா

காதல் என் காதல் 

அது ஏங்கி போகலாமா


கரையில் மோதும் 

அலைகள் ஒயலாம் 

காதல் நெஞ்சம் ஒயுமா

வானில் தோன்றும் 

கதிரும் தேயலாம் 

காதல் நினைவு தேயுமா

நிலவில் கூட களங்கம் கானலாம் நெஞ்சில் அது ஏதம்மா

வானவில் கூட நிறங்கள் மாறலாம் நேசம் நிறம் மாறுமா

தலை சாய்க்க மடி தேடி 

யுகம் தோரும் வருவேனே


ஜீவன் என் ஜீவன் 

எனை நீங்கி போகலாமா

காதல் என் காதல் 

அது ஏங்கி போகலாமா

Post a Comment

0 Comments