ஆறடி சுவருதான் ஆசையை

 



ஆண் : ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா

கிளியே தந்தன கிளியே

கோட்டையை எழுப்பலாம்

பாதையை மறைக்கலாம்

கிளியே தந்தன கிளியே

காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்

காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ

ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா

கிளியே தந்தன கிளியே

கோட்டையை எழுப்பலாம்

பாதையை மறைக்கலாம்

கிளியே தந்தன கிளியே


***


ஆண் : ஆழ்கடல் அலைகளும்

ஓயுமோ பிறர் ஆணையால் ஓ ..

பூமியில் மலைகளும்

சாயுமோ வெறும் சூறையால் ஓ..

காவல் தனை தாண்டியே

காதல் இசை தீண்டுமே

நீயெங்கே ஓ ...நான் அங்கே ஓ ..ஓ ..ஓ ..

ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா

கிளியே தந்தன கிளியே

கோட்டையை எழுப்பலாம்

பாதையை மறைக்கலாம்

கிளியே தந்தன கிளியே


***


ஆண் : ராத்திரி வலம் வரும்

பால் நிலா என்னை வாட்டுதே ஓ ..

நேத்திரம் துயில் கொள்ளும்

வேளையில் அனல் மூட்டுதே ஓ ..

வாடும் மலர் தோரணம்

நீயும் இதன் காரணம்

நீயெங்கே ஓ ..நான் அங்கே ஓ ..ஓ ..ஓ ..

ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா

கிளியே தந்தன கிளியே

கோட்டையை எழுப்பலாம்

பாதையை மறைக்கலாம்

கிளியே தந்தன கிளியே


***


பெண் : வானெலாம் நிலம் வளம்

நீரெலாம் உன்னை பார்க்கிறேன் ஓ ..


ஆண் : காத்திரு நலம் பெறும்

நாள் வரும் சிறை மீட்கிறேன் ஓ ..


பெண் : போதும் படும் வேதனை

காதல் தரும் சோதனை


ஆண் : நீயெங்கே ஓ...நான் அங்கே ஓ ..ஓ ..ஓ ..


பெண் : ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா

கிளியே தந்தன கிளியே


ஆண் : கோட்டையை எழுப்பலாம்

பாதையை மறைக்கலாம்

கிளியே தந்தன கிளியே


பெண் : காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்


ஆண் : காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ

ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா

கிளியே தந்தன கிளியே

கோட்டையை எழுப்பலாம்

பாதையை மறைக்கலாம்

கிளியே தந்தன கிளியே

Post a Comment

0 Comments