எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்..
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய
எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தே..ன்
நீங்காமல் தானே நிழல் போலே நானே
வருவேன் உன் பின்னோடு எந்நாளும் தான்
பூப்போன்ற மனதை பொல்லாத மனதால்
தவறாக எடைப்போட்டு சென்றாலும்தான்
பாலைப்போல கள்ளும் கூட
வெண்மையா...னது
பருகிடாது விளங்கிடாது உண்மையா..னது
நீயும் காணக்கூடும் இங்கும் ஓர் தினம்
இந்த பா..ல் மனம்....
எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தே..ன்...
பூர்வீகம் உனக்கு எதுவென்று எனக்கு
மறைத்தாலும் என் கண்கள் ஏமாறுமா..
புரியாத புதிராய் விளங்காத விடையாய்
இருந்தாலும் உண்மைகள் பொய்யாகுமா
என்னை கண்டு அச்சம்
கொள்ள தேவையில்லையே
வேலி மீது குற்றம் சொன்ன
தோட்டம் இல்லையே
நண்பன் என்று என்னை ஏற்கும் நாள் வரும்
அந்த நாள் வரும்
எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்
நினைவு அலைகள் மனதில் எழும்பும் நேரம்
தட்டிவிட்டேன் மனக்கதவை
திறந்து பார்க்க விறைந்து வா
நெஞ்சம் உந்தன் நெஞ்சம்
கொண்ட சஞ்சலங்கள் மறைய
எங்கிருந்தோ இளங்குயிலின்
இன்னிசை கேட்டு கண்விழித்தேன்.
படம்:- பிரம்மா
பாடியவர்:- எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை:- இளையராஜா
பாடல் வரிகள்:- வாலி
0 Comments