ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
பூக்களை தென்றல் போல தேடுவேன்
நீ வரும் பாதையில் கண்களால் தவம் இருப்பேன்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
உன்னை பார்த்த நாளில் தான் கண்ணில் பார்வை தோன்றியது
உந்தன் பேரை சொல்லி தான் எந்தன் பாஷை தோன்றியது
உன்னை மூடி வைக்கத்தான் கண்ணில் இமைகள் தோன்றியது
உன்னை சூடி பார்க்கத்தான் பூக்கள் மாலை ஆகியது
நீ என்னை சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை
பார்த்து பார்த்து ஏங்கிய சொந்தம் வாசல் வந்து சேர்ந்ததே
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
உன்னை நீங்கி எந்நாளும் எந்தன் ஜீவன் வாழாது
உந்தன் அன்பில் வாழ்வதற்கு ஜென்மம் ஒன்று போதாது
உன்னை எண்ணும் உள்ளத்தில் வேறு எண்ணம் தோன்றாது
காற்று நின்று போனாலும் காதல் நின்று போகாது
எங்கெங்கோ தேடிய வாழ்வை உன் சொந்தம் தந்தது இங்கே
சந்தங்கள் தேடிய வார்த்தை சங்கீதம் ஆனது இங்கே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால் வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
பூக்களை தென்றல் போல தேடுவேன்
நீ வரும் பாதையில் கண்களால் தவம் இருப்பேன்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
.
0 Comments