மேகங்கள் எங்கே போனாலும்
பூமிக்கு ஒன்றே ஆகாயம்
விழியன் ஈரம் உனதன்பை கூறும்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
நாடோடி மன்னா போகாதே
நீரின்றி மீனும் வாழாதே
விழியன் ஈரம் உனதன்பை கூறும்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
போகாதே நாடோடி
நண்பா போகாதே
மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே
போகாதே நாடோடி
நண்பா போகாதே
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே
நாடோடி நண்பன் போகாதே
என்றென்றும் காதல் மாறாதே
உடல் மட்டும் தானே
கடல் விட்டு தாண்டும்
நினைவிங்கு என்னோடு
நீங்காமல் வாழும்
பகல் வந்த போது
இருள் எங்கு போகும்
இருள் வந்த போது
நிழல் எங்கு போகும்
எம் இமைகள் இங்கு மூடாமல்
உன் விழிகள் அங்கே தூங்காதே
நீ மறந்தே தூங்கி போனாலும்
நான் கனவில் வருவேன் அப்போதே
கனவுகள் வேண்டாம் கனவுகள் வேண்டாம்
உயிரினில் ஊஞ்சல் ஆடு
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
உயிர் தந்த பூமி
எனை அங்கு தேடும்
என் தோட்ட பூவெல்லாம்
காணாமல் வாடும்
மரம் என்னை தேடி
கிளை கைகள் நீட்டும்
குயில் கூட்டம் நானின்றி
குரல் வற்றி போகும்
என் தேசக்காற்றும் வாடாதோ
என் சுவாசம் தன்னை தேடாதோ
அடி காதல் கொண்ட ரோஜாவே
என் உறவுகள் பிரிந்திட வாழ்வேனோ
வார்த்தைகள் வேண்டாம்
வார்த்தைகள் வேண்டாம்
மௌனத்தினாலே பேசு
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
இது காதல் ஆரம்பம்
போகாதே நாடோடி
நண்பா போகாதே
மூடாதே என் காதல் ஜன்னல் மூடாதே
போகாதே நாடோடி
நண்பா போகாதே
மூடாதே இந்த காதல் ஜன்னல் மூடாதே (2)
நாடோடி நண்பா போகதே
என்றென்றும் காதல் மாறாதே
0 Comments