சிக்கன் பர்கர்

 

சிக்கன் பர்கர்




தேவையான பொருட்கள்:

§       அரைத்த கோழிக்கறி - கால் கிலோ

§       வெங்காயம் - ஒரு மேசைக்கரண்டி

§       பச்சைமிளகாய் - ஒன்று

§       மிளகுத்தூள் - அரைதேக்கரண்டி

§       உப்புத்தூள் - அரைதேக்கரண்டி

§       கரம் மசாலா - அரைதேக்கரண்டி

§       ரொட்டித்தூள் - இரண்டு மேசைக்கரண்டி

§       முட்டை - ஒன்று

§       கொத்தமல்லி - ஒரு மேசைக்கரண்டி

§       வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

§       Hamburger bun - 4


 செய்முறை:

§       கோழிக்கறியிலுள்ள தோல், எலும்பு, கொழுப்பை நீக்கிவிட்டு சிறிது நேரம் (பத்து நிமிடம்) ஃபிரீசரில் வைத்திருந்து பிறகு அரைக்கவும்.

§       ஒரு கிண்ணத்தில் முட்டையை நன்கு அடித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மிளகுத்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு நன்கு கலக்கி நான்கு பாகமாக பிரித்துக்கொள்ளவும்.

§       பிறகு கைகளில் சிறிது எண்ணெயை தடவிக்கொண்டு உருண்டைகளாக உருட்டி உள்ளங்கையில் வைத்து தட்டையாக செய்யவும்.

§       பிறகு குளிர்சாதன பெட்டியில் பதினைந்து நிமிடம் ப்ளாஸ்டிக் கவரால் மூடி வைக்கவும்.

§       பிறகு கோழியை ரொட்டித்தூளில் புரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு இரண்டு புறமும் திருப்பி விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

§       பன்னை இரண்டாக குறுக்கு வசமாக கட் செய்து, தோசைக்கல்லில் போட்டு நன்கு சூடாக்கி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்,

§       பன்னின் உட்பக்கம் இரண்டு புறமும் வெண்ணெய்யை தடவிவிட்டு, சிக்கன் பர்கரை வைத்து, தக்காளி சாஸை ஊற்றி பரிமாறவும்.

§       அல்லது வெங்காயம், தக்காளி, சீஸ் ஸ்லைஸை வைத்து ஒரு துண்டு சாலட் இலையை வைத்து உப்புத்தூள், மிளகுத்தூளை தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்பு:

சிக்கனை வீட்டில் அரைப்பதற்கு பதிலாக கடையில் கிடைக்கும் Ground chickenனைக் கொண்டு தயாரித்தால் நேரத்தை மிச்சபடுத்தலாம். ருசியிலும் எந்த மாற்றமும் இருக்காது.


😋😋😋😋😋😋

Post a Comment

0 Comments